Advertisement

Responsive Advertisement

இலங்கை சிறை கைதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி- அரசாங்கம் வழங்கும் விசேட சலுகை அறிவிப்பு!!

 


சிறைச்சாலை கைதிகள் குடும்ப உறவினர்களுடன் உரையாடுவதற்கு இன்று முதல் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.


கைதிகளின் உளநலன்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி சிறைக்கைதிகள் தங்களது குடும்ப உறவினர்களுடன் தொலைபேசியில் உரையாடுவதற்கு 3 நிமிடங்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டு ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை அதிகாரி ஒருவர் முன்பாக குறித்த தொலைபேசி அழைப்புக்கள் இணைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய இன்று முதல் எதிர்வரும் இரண்டுமாத காலப்பகுதிக்கு குறித்த சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டு ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments