Advertisement

Responsive Advertisement

இராணுவத் தளபதி விடுத்துள்ள மற்றுமொரு எச்சரிக்கை!


 நாட்டில் தற்போது நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொது போக்குவரத்து தொடர்பில் இராணுவத் தளபதி மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மக்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் போது, வாகனங்களின் இலக்கங்களை குறித்துக்கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போது மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் எனவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் வாகன சாரதிகளுக்கும் தொற்று குறித்து எச்சரிக்கை விடுக்க முடியும் என தெரிவித்துள்ளார். அத்துடன், அனைத்து ஆடைத் தொழிற்சாலைகளும் ஏனைய நிறுவனங்களிலும் பணியாற்றும் ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

வாரத்திற்கு ஒரு தடவையேனும் தொழிற்சாலை ஊழியர்களில் ஒரு பகுதியினருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் பெருமளவான ஊழியர்கள் பணியாற்றும் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல்வேறு தொழிற்சாலை ஊழியர்கள் ஓரிடத்தில் தங்கியிருப்பார்களாயின் அது குறித்து எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் எனவும் தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் வெவ்வேறு தொழிற்சாலைகளுக்கு தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments