எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) களுவாஞ்சிக்குடி நலன்புரிச் சங்கம் ஒழுங்கு செய்திருந்த சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் இன்று ( 2 ) பாடசாலை அதிபர் எம்..சபேஸ் குமார் தலைமையில் இடம்பெற்றது.
எருவில் அரசடிப்பிள்ளையார் ஆலய
குருக்கள் சிவஸ்ரீ மோகன்ராஜ் சர்மா அவர்களின் தலைமையில் பாடசாலை ஆரம்ப பிரிவு பகுதித்தலைவர் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பாடசாலை , சரஸ்வதி சிலைக்கு முன்னால் இடம்பெற்ற விசேட பூசையினை தொடர்ந்து திறந்தவெளியரங்கில் இடம்பெற்ற் சிறுவர் தின நிகழ்வில் அதிபர் எம்.சபேஸ்குமார் , ஆசிரியர்களான பீ.சுதர்சன் ,ரீ.கோகுலசாந்தி மாணவிகளான சீ.கதுஸ்டிகா , க.கியானிகி ஆகியோரின் சிறுவர்கள் தொடர்பான உரைகளும் , மட்டக்களப்பு கல்வியில் கல்லூரி கட்டுரு பயிலுனர் ஆசிரிய மாணவி வீ.மயூரியின் சோலோ பெபோமென்ஸ் விசேட ஒப்பனையும் , ஏ.கலாபராஜன் ஆசியரின் ஓரங்க நாடகமும் ரீ.றுத்திராஹன் ஆசிரியரின் இசையும் அசைவும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வுகள் அனைத்தையும் சிரேஸ்ட ஆசிரியர் எஸ்.சுரேந்திரன் தொகுத்து வழங்கியதோடு நலன்புரி சங்கத்தலைவர் ஆர்.துஸாந் , செயலாளர் ரீ.கெளரீசன் ஆகியோர் நெறிப்படுத்தியுமிருந்தனர்.
0 Comments