Home » » மட்டக்களப்பு- கல்வி அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வு!!

மட்டக்களப்பு- கல்வி அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வு!!

 


மட்டக்களப்பு கல்லடி கல்வி அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வு நேற்று (2020.10.01) மாலை கல்வி அபிவிருத்தி சங்க சிவநேசராசா அரங்கில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் திரு.தி.சரவணபவன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கல்லடி பேச்சியம்மன் ஆலயம் மற்றும் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பரிபாலன சபை தலைவர் திரு.S.சந்திரகுமார், கல்லடி வேலூர் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய பரிபாலன சபை தலைவர் திரு.சுரேஸ்குமார் மற்றும் கல்வி அபிவிருத்தி சங்க ஸ்தாபக தலைவர் திரு.S.தேவசிங்கன் மற்றும் கல்வி அபிவிருத்தி சங்க ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்திருந்தனர்.

இந்நிகழ்வானது விருந்தினர்களை வரவேற்று மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. அதனைத் வரவேற்றபுரை  கல்வி அபிவிருத்தி சங்க மாணவி S.சுகிர்தாவினால் நிகழ்த்தப்பட்டது. அதனையடுத்து மாணவர்களால் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட வரவேற்பு நடனம் நிகழ்த்தப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து  நடைபெற்ற நிகழ்வில் கல்வி அபிவிருத்தி சங்க மாணவர் அமைப்பு தலைவியான செல்வி.க.ஜன்யாவினால் தலைமை உரை நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் கல்வி அபிவிருத்தி சங்க மாணவர் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட கலைநிகழ்வுகளான நாடகங்கள், பாடல்கள், பேச்சு, கவிதைகள் என பல்வேறு நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.

குறித்த நிகழ்வுகளில் மத்தியில் அதிதிகளின் உரை நிகழ்த்தப்பட்டது. இதில் உரை நிகழ்த்திய கல்லடி வேலூர் ஆலய பரிபாலன சபை தலைவர் திரு.சுரேஸ்குமார் மாணவர்களின் கலைநிகழ்வுகள் சிறப்பாக இருந்ததாகவும் அத்துடன் மாணவர்களின் கல்வியில் கல்வி அபிவிருத்தி சங்கம் ஆற்றிவரும் பணிகள் பற்றியும் மற்றும் சமூகப்பணி பற்றியும் தனது கருத்துக்களை தெரிவித்து சிறுவர்களுக்கு சிறுவர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்து சென்றார்.

இதனைத்தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட அதிதி உரையில் கல்லடி பேச்சியம்மன் மற்றும் சித்திவிநாயகர் ஆலய பரிபாலன சபை தலைவர் திரு.சந்திரகுமார் மாணவர்களின் கலைநிகழ்வுகள் ஆழமான கருத்துக்களையும், சிறுவர்களின் நிலைகள் தொடர்பாகவும் சிறப்பாக விளங்கிக்கொள்ளும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த கலைநிகழ்வுகளை கிராமப் புற மக்களுக்கு அறியும் வண்ணம் கிராமப்புறங்களில் நிகழ்த்த நடவடிக்கைகள் எடுத்தால் சிறப்பாக இருக்கும் என்றும் கிராம புற மக்களின் கல்வி ஆர்வத்தை அதிகரிக்க உதவும் என்றும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்,

இதனைத்தொடர்ந்து பிரதம விருந்தினர் உரை மட்டக்களப்பு மாநகர முதல்வரால் நிகழ்த்தப்பட்டது. இதில் அவர் மட்டக்களப்பு மாநகர சபையால் மட்டக்களப்பில் செயற்படுத்தப்படும் சிறுவர்களுக்கான சிறப்பட்டு திட்டங்கள் தொடர்பிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாநகர சபையால் அமைக்கப்பட்டுள்ள டிஜிற்றல் முறை நூலகம் தொடர்பிலும் குறித்த நூலகத்தால் ஆற்றப்படும் பணிகள் தொடர்பிலும் கருத்துக்களை தெரிவித்ததுடன் பெற்றோர் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளில் அக்கரையற்று காணப்படுவதாகவும் இதனால் தற்போது மாணவர்கள் போதைப்பொருள் போன்ற தீய பழக்கங்களுக்கு உள்ளாகி வருவதாகவும் அவ்வாறான செயற்பாடுகளை தவிர்ப்பதற்கு பெற்றோர் பிள்ளைகள் மீது சரியான கவனம் எடுத்து செயற்பட வேண்டும் என்றும் கூறியதுடன் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் செயற்பாடுகள் சகல துறைகளிலும் பரந்து காணப்படுவதாகவும், படுவான் கரை மக்களின் கல்வி அபிவிருத்திக்கு கல்வி அபிவிருத்தி சங்கம் பெரும் பங்காற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து கலைநிகழ்வுகளில் பங்கு பற்றிய மாணவர்களுக்கு அதிதிகளால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கல்வி அபிவிருத்தி சங்கத்தின் மாணவர் அமைப்பு செயலாளரான செல்வன்.வி.பிறேமிக்காந் அவர்களால் நன்றி உரை நிகழ்த்தப்பட்டு நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |