முல்லேரியா மற்றும் கொத்தட்டுவ பகுதிகளுகளில் இன்று இரவு 7 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
இந்த ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கம்பஹா, குளியாப்பிட்டி, கொழும்பு, மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 49 பொலிஸ் பிரிவுகளில் ஏற்கனவே தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது.
மேலதிக அறிவிப்பு வரும் வரை கொழும்பில் உள்ள மருதானை மற்றும் தெமட்டகொட பகுதிகளிலும் நேற்று இரவு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது.
இதற்கிடையில், களுத்துறை மாவட்டத்தின் பயாகல, பேருவளை மற்றும் அளுத்கம பொலிஸ் பிரிவுகளிலும் உடன் அமுலுக்கு வரும் வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 05.00 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
0 comments: