அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவாக தம்மால் வாக்களிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு மைத்ரிபால சிறிசேன எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
19 ஆவது திருத்தத்தை கொண்டுவர முன்னிலையில் இருந்தவன் என்ற ரீதியில் மனசாட்சியின்படி என்னால் 20ஆவது திருத்தத்திற்கு வாக்களிக்கமுடியாது. அதற்காக வருத்தத்தை தெரிவிக்கிறேன்“ என மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எனினும், அவரின் கட்சியான சுதந்திரக்கட்சி ஆதரவளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், மைத்திரிபால சிறிசேன வாக்கெடுப்பில் பங்கேற்கமாட்டார் என குறிப்பிடப்படுகின்றது.
0 Comments