Home » » உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட செய்தி...!!

உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட செய்தி...!!

 


கம்பஹா மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.


எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை இந்த காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.

இதேவேளை, ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ள கம்பஹா மாவட்டத்தின் ஊடாக வாகனங்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும், அந்த பிரதேசங்களில் வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை என பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

எனினும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்கள், கல்வி, சுகாதார மற்றும் பாதுகாப்பு பணிக்குழாமினருக்கு போக்குவரத்துக்கான வாய்ப்பு காணப்படுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

களுத்துறை மாவட்டத்தின் - அகலவத்தை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொரக்கொட, பேரகம, அகலவத்த, தாபிலிகொட, கெக்குலன்தர வடக்கு கிராம சேவகர் பிரிவு மற்றும் பாலிந்த நுவர பிரதேச செலாளார் பிரிவின் பெல்லன கிராம சேவகர் பிரிவு என்பன தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களிலும் உயர் தர பரீட்சைக்காக தோற்றவுள்ள மாணவர்களுக்காக விசேட போக்குவரத்து சேவை அமுல்படுத்த இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.

உயர் தர பரீட்சை மாணவர்கள், பரீட்சை பணிக்குழாமினர், பாதுகாப்பு பிரிவினர் மற்றும் சுகாதார பிரிவினரும் போக்குவரத்து ஈடுபடுவதற்கு மாத்திரம் அந்த பகுதிகளில் இந்த போக்குவரத்து சேவை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸிலி ரணவக்க தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |