Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கம்பஹா ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த மேலும் 119 பேரை தேடும் பணிகள் தீவிரம்...!!

 


பிரன்டிக்ஸ் நிறுவனத்தில் பணி புரிந்த மேலும் 119 பேர் தொடர்பில் விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கம்பஹா மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.


கம்பஹா மாவட்டத்தின் கொரோனா நிலைமை தொடர்பில் அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (09) குறித்த எண்ணிக்கை சுமார் 250 ஆக காணப்பட்ட நிலையில் அதனை குறைத்துக் கொள்ள கூடியதாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.

குறித்த நபர்களை தேடுவதற்காக பாதுகாப்பு பிரிவினால் விசேட தேடுதல் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த நபர்களை இனங்கண்டு தனிமைப்படுத்தல் அல்லது சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி வைக்க சந்தர்ப்பம் கிடைக்கும் பட்சத்தில் கம்பஹா மாவட்டத்தினுள் கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்த கூடியதாக இருக்கும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments