வர்த்தகர்கள் அரிசி பற்றாக்குறையை ஏற்படுத்தி அரிசி விலையை அதிகரிக்க முற்படுவார்களாயின், அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சரவை அனுமதி பெறப்படவுள்ளதாகவும், இதற்காக 2 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மரதகஹமுல பகுதியில் அமைந்துள்ள நெற் களஞ்சியசாலைக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
0 Comments