கொழும்பு நகரின் சில பகுதிகளில் நாளை முதல் மீண்டும் பஸ் முன்னுரிமை திட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரட்ன இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை போக்குவரத்து விதிமுறைகளை மீறி பயணிக்கும் சாரதிகளை கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கென விசேட பாதுகாப்பு கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன் சிறந்த வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் பஸ் முன்னுரிமை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நாளை முதல் மீண்டும் அமுல்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்கமைய கொழும்பு நகரின் நான்கு வீதிகளை மையப்படுத்தி பஸ் முன்னுரிமை திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதனிடையே நாளை முதல் மீண்டும் அமுல்படுத்தப்படும் பஸ் முன்னுரிமை திட்டத்தை மீறி செயற்படும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
0 comments: