Advertisement

Responsive Advertisement

கண்டியை உலுக்கிய கோர சம்பவம்! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பரிதாபமாக பலி!!


 கண்டி – பூவெலிகட பிரதேசத்தில் இன்று அதிகாலை 5 மாடிக் கட்டடம் ஒன்று மண்ணில் புதையுண்டுள்ளது.


இந்த அனர்த்தத்தில் சிக்குண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, இளம் தாய் மற்றும் இரண்டு மாத குழந்தை உயிரிழந்துள்ளனர். கண்டி வைத்தியசாலை அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

குறித்த கட்டடத்திற்குள் சிக்கியுள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் இருவரை காணவில்லை என மீட்பு பணியினர் தெரிவித்துள்ளனர்.

கட்டட இடிபாடுகளில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்ட இளம் தாயும் பிள்ளையும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனார்.

சிறப்பு அதிரடி படையினர் தொடர்ந்தும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று அதிகாலை ஐந்து மாடிக் கட்டடம் நிலத்திற்குள் இறங்கிய நிலையில், அருகிலுள்ள வீடுகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments