பாராளுமன்ற அலுவல்களை கவனிக்க பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்தா யப்பா அபேவர்தனவினால் குழுவொன்றை நியமிக்கப்பட்டுள்ளது. இக் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், சாரதி துஷ்மந்தா வேலுகுமார், மாயந்த திஸ்நாயக்க, ஹர்ஷனா கருணநாயக்க, ரோஹினி குமாரி விஜரத்ன, சஞ்சீவா எரிமிமன்னே, கோகில குணவர்தன இசுரு டோடங்கொட, வசந்தா யபா பண்டாரா வீரசுமன வீரசேகர ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இளம் நாடாளுமன்ற
உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு உயரிய பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவருக்கு சபாநாயகரால் குழுவில் அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது பிரதி சபாநாயகர் அல்லது குழுக்களின் தலைவர் அமர்வில் பிரசன்னமாகாத
சந்தர்ப்பத்தில் அவையை கொண்டு நடத்தும் பொறுப்பு மற்றுமொரும் தமிழரான இரா.சாணக்கியனுக்கு
வழங்கப்பட்டுள்ளது.
தனது நாடாளுமன்ற கன்னி உரையில் நாடாளுமன்றத்தில் மும்மொழியிலும் உரையாற்றிய இரா.சாணக்கியன் பலரது கவனத்தினையும் ஈர்த்திருந்தார். குறிப்பாக தமிழ் மக்களின் பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் சிங்கள
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற இரா.சாாணக்கியனுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வந்ததுடன் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேர் பார்வையிட்ட உரையாக அவரது கன்னியுரை வைரலாகியிருந்த நிலையில் நாடாளுமன்றத்தில் தற்போது அவருக்கு வழங்கப்பட்டுள்ள குறித்த உயர் பதவியானது அவருடைய மும்மொழி திறமைக்கும் ஆளுமைக்கும் கிடைத்த அங்கீகாரமாக பார்க்கப்படுகின்றது. இதேய வேளை இரா.சாணக்கியன் இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது சிறிது நேரம் நாடாளுமன்ற அமர்வுகளுக்கு தலைமை தாங்கியிருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.
0 Comments