Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் தேர்தலால் இடைநிறுத்தப்பட்ட இடமாற்ற ஆசிரியர்கள் மீள திரும்பாததால் பெருத்த ஆசிரியர் தட்டுப்பாடு


 சிஹாரா லத்தீப்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாகாண கல்வித் திணைக்களம் ஆசிரியர் இடமாற்றங்களைச்செய்து பொதுத்தேர்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டப்பட்ட போதிலும் குறித்த ஆசிரியர்கள் புதிய கடமைப் பாட சாலைகளுக்கு மீள திரும்பவில்லை எனவும் இதனால் மாவட்டத்தில் மட்டக்களப்புமேற்கு, மட்டக்களப்புமத்தி, கல்குடா கல்வி வலயங்களில் பெருத்த ஆசிரியர் மற்றும் நிரந்தர அதிபர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வலயக்கல்விப்பணிப்பாளர்களால் குறைபாடு தெரிவிக்கப்படுகின்றது.


ஜனாதிபதி செயலகத்தின் ஆலோசனைக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் அபிவிருத்தி வேலைகளின் முன்னேற்றங்கள் மற்றும் எதிர் நோக்கும் சவால்களை கண்டறிந்து தீர்வுகாண்பது தொடர்பாக மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக நடாத்தப்பட்ட விசேட கூட்டத்திலேயே இந்த குறைபாடு தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்ற இந்த விசேட கூட்டத்தில் மாவட்டத்தில் மாவட்ட காணிப்பிரிவு மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்சனி, திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி மற்றும் மாவட்டத்தில் செயல்படும் அரச திணைக்களங்களின் உள்ளூர் தலைவர்கள், பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.

இக்கூட்டத்தில் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 15௦ அதிபர்களும் 285 ஆசிரியர்களும் மேலதிகமாக இருப்பதாகவும் மத்திய கல்வியமைச்சின் நிருவாகத்திலுள்ள தேசிய பாடசாலைகளான சிவானந்தா தேசிய பாடசாலையில் 35 ஆசிரியர்களும் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியில் பாட அட்டவணை இல்லாத நிலையில் 16 ஆசிரியர்கள் மேலதிகமாக இருப்பதாகவும் எனினும் மட்டக்களப்பு மேற்கு, கல்குடா கல்வி வலயங்களில் பெருமளவு ஆசிரியர்கள், அதிபர்களுக்கு வெற்றிடம் நிலவுவதாகவும் வலயக் கல்விப் பணிப்பாளர்களால் குறைபாடு தெரிவிக்கப்பட்டது.

இந்த விசேட அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் கல்வி, நீர்ப்பாசனம், விவசாயம், தேசிய உரசெயலகம், கால்நடை உற்பத்தி சுகாதாரம், மீன்பிடி, வீடமைப்பு, தென்னை அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி உட்பட பல்வேறு துறைகள் சார்ந்த அபிவிருத்திப்பணிகளின் முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டதுடன் எதிர்நோக்கும் சவால்களை எதிர் கொள்ள தேவையான மாற்று நடவடிக்கைகள் பற்றியும் ஆராயப்பட்டது.

Post a Comment

0 Comments