Home » » போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு ஆப்பு- சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு திட்டம்!!

போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு ஆப்பு- சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு திட்டம்!!

 


போதைப்பொருள் வர்த்தகர்களின் சொத்துக்களை அரசுடமையாக்குவதற்காக புதிய சட்டமொன்றை தயாரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.


கடந்த சில மாதங்களில் திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பாதாளக் குழு உறுப்பினர்களின் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான வாகனங்கள் மற்றும் காணிகள் உட்பட பல்வேறு உடமைகள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன.

அதேநேரம், அவர்களின் வங்கி கணக்குகளில் இருந்து தற்போது வரையில் 2 ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கு அதிக பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது,

இந்த நிலையில், அவற்றை அரசுடமையாக்குவதற்கு தற்போதுள்ள சட்டத்தில் குறைப்பாடுகள் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் வர்த்தக செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பதற்கு அவை தடைகளை ஏற்படுவதாக காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் போதைப்பொருள் வர்த்தகர்கள், சட்டவிரோதமாக சேமித்த சொத்துக்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் விசேட காவல்துறை பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், சட்டதுறையினருக்கும் இடையில் நாளைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |