Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஒலுவில் -அக்கரைப்பற்று பிரதான வீதியில் விபத்து- தென் கிழக்குப் பல்கலை விரிவுரையாளர் தெய்வாதீனமாக உயிர் தப்பினார்!

 


நூருள் ஹுதா உமர்

இன்று காலை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகத்திற்கு அண்மையில் நடந்த விபத்தில் மருதமுனையைச் சேர்ந்த தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளரும் பிரபல இலக்கியவாதியுமான அம்ரிதா ஏயெம் என அறியப்படும் றியாஸ் அகமட் விபத்துக்குள்ளானார். இவர் நாடறிந்த இயற்கை ஆர்வலராவார்.

கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் செல்லும் பிரதான வீதியில், களியோடைப் பாலத்தினை தாண்டிய பகுதியில் செலுத்திச் சென்ற கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, பிரதான வீதியின் அருகில் உள்ள அணைக்கட்டில் மோதுண்டுள்ளது.

இதனால், விரிவுரையாளர் காயங்களுடன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கார் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments