Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்

 


பட்டிருப்பு ம.ம.வி, தேசிய பாடசாலை – களுவாஞ்சிகுடியின் அதிபராக முருகமூர்த்தி சபேஸ்குமார் இன்று (23.09.2020) கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார். தம்பிலுவில்லைச் சேர்ந்த விஞ்ஞானப் பட்டதாரியான இவர் இலங்கை கல்வி நிர்வாக சேவைப் பரீட்சையில் தமிழ் மொழி மூலத்தில் முதல் நிலையைப் பெற்றுக் கொண்டவர் என்பதோடு அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் மற்றும் உதவிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.தயாளசீலன் ஆகியோர் முன்னிலையில் கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்ட புதிய அதிபரை பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள்; வரவேற்று வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

Post a Comment

0 Comments