கொரோனா தாக்கம் காரணமாக பாடசாலைகள் அனைத்தும் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டன. அதே நேரம் ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த க.பொ.த உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளும் நிறுத்தப்பட்டன.
கொரோனா தாக்கம் குறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு கல்விச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதே நேரம் க.பொ.த உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் நடாத்துவதற்கு கல்வியமைச்சு தற்போது தீர்மானித்துள்ளது.
அதன் பிரகாரம் எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 6ஆம் திகதி வரையில் க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நடைபெறவுள்ளது.
அதற்கான புதிய, பழைய பாடத்திட்டங்களுக்கான பரீட்சை நேர அட்டவணை இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

0 Comments