நாளை நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கொரேணா நோயிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கில் ஜனாதிபதியின் வழிகாட்டலில் பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம் பெற்று வருகின்றது.
அந்தவகையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் உள்ள அனைத்து பிரதேசங்களுக்கும் பொது அறிவித்தலை கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
வாக்களிப்பு செல்லும் போது முக கவசம் அணிந்து செல்லுமாரும் கருப்பு அல்லது நீல நிற பேனை கொண்டு செல்வதுடன் வாக்களிப்பு நிலையத்தில் சமுக இடைவெளி பேணுவதுடன் வாக்களித்ததன் பின்னர் கூட்டமாக சேர்வதை தவிர்த்துக் கொள்ளுமாரும் அவ் அறிவித்தலில் தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments