Home » » சிந்திக்க வேண்டிய இறுதி நிமிடங்களில் வாக்காளர்களாகிய நாமும்.... தேர்தல் தொடர்பான சிறிய கண்ணோட்டமும்!

சிந்திக்க வேண்டிய இறுதி நிமிடங்களில் வாக்காளர்களாகிய நாமும்.... தேர்தல் தொடர்பான சிறிய கண்ணோட்டமும்!

(ஏ. எம். எம் பர்ஹான்)
நாளை 9வது நாடாளுமன்ற தேர்தலை எதிர் கொள்ள இருக்கும் இலங்கை பிரஜைகளாகிய நாம் அனைவரும் எந்த கட்சிக்கு அல்லது எந்த வேட்பாளருக்கு வாக்களிப்பது பற்றி சிந்திக்க வேண்டிய இறுதி நிமிடங்களில் இருந்து கொண்டிருக்கின்றோம்.

எட்டு பாராளுமன்ற தேர்தல்களை கடந்து ஒன்பதாம் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் தகுதி பெற்றுள்ள நாம் வாக்களிப்பது எவ்வளவு முக்கியமோ அதே போல் தேர்தல் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் முறை தொடர்பிலும் தெரிந்திருக்க வேண்டும். 1947 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த பாராளுமன்ற முறையினை ஆங்கிலேயர்களால் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒரு போக்கிஷமாகவே இன்று வரை காண முடிகின்றது. காலம் மாற்றத்தினாலும் ஆட்சியாளர்களாலும் பாராளுமன்ற முறை மற்றும் யாப்புக்களில் சிரியளவிலான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருந்தாலும் இன்று வரை ஐக்கிய இராச்சிய பாராளுமன்ற நிழலாகவே இலங்கை பாராளுமன்ற முறையும் அமைந்துள்ளது.

இலங்கையில் 25 மாவட்டங்களில் 22 தேர்தல் நிர்வாக மாவட்டங்களாக அரசு நிரணையித்துள்ளது. மேலும் இத்தேர்தல் மாவட்டங்களில் இருந்து மொத்தமாக 196 உறுப்பினர்கள் தேர்தல் மூலமும் ஏனைய 29 உறுப்பினர்கள் தேசியப்பட்டியல்(National List) மூலமும் மொத்தமாக 225 உறுப்பினர்களும் பாராளுமன்றம் செல்வார்கள். இவ்வாறு 225 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சார்பில் 3,682 பேரும் சுயேட்சை குழுக்களின் சார்பாக 3,800 பேரும் மொத்தமாக 7,452 வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். மேலும் இந்த 2020 ஜனநாயக தேர்தலில் வாக்களிக்க 1 கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 874 இலங்கை பிரஜைகள் தகுதி பெற்றுள்ளனர். 

2020 தேர்தல் பல்வேறு வரலாற்று சிறப்பம்சங்களையும் கொண்ட தேர்தலாகவும் அமையப்பெற்றுள்ளது. 2015ம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் என்ற நாமத்தில் ஆட்சி பீடம் ஏறிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் 2018 நவம்பர் மாதம் கடந்த பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. எனினும் நான்கு வருடம் முடிவுறாத நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து மேன்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்து மீண்டும் பாராளுமன்றம் கூட்டப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஒரு பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஐந்து மாதங்களின் பின்னர் பொதுத்தேர்தல் நடைபெறுவது இலங்கை வரலாற்றில் இதுவே முதன்முறையாகும். தற்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ அவர்களினால் கடந்த மார்ச் 1ம் திகதி கலைக்கப்பட்டிருந்தாலும் எதிர்பாராத விதமாக கொரோனா நோய்ப்பரவலினால் தேர்தல் பிற்போடப்பட்டது.

எது எவ்வாறாயினும் அடுத்த 4 அல்லது 5 வருடத்திடற்கான பாராளுமன்ற ஆட்சியை தீர்மானிக்கப்போவது நாளை நாம் அளிக்க போகும் ஒவ்வொரு வாக்குகளுமே. வெறும் வாய்ச்சொல் அரசியல்வாதிகளுக்கோ, ஒரு ஊழல்வாதிக்கோ, ஒரு இனவாதிக்கோ அல்லது எமக்கெதிரான பிரச்சனைகளின் போது குரல் கொடுக்கத்தவருக்கோ வாக்களிக்காமல் எமது மாவட்டத்தின், பிரதேசத்தின் எதிர்காலத்தை சிறந்த அபிவிருத்தி மூலமும் இளைஞர்களின் வேலையின்மை பிரச்சனையை தீர்க்க கூடிய, போதைவஸ்த்துக்கெதிராக குரல் கொடுக்க கூடிய, ஊழலுக்கு துணை போகாத, கல்வி வளர்ச்சியிலும் வறுமை ஒழிப்பிலும் திறன்பட செயலாற்ற கூடிய ஒரு சிறந்த ஆளுமைமிக்க ஒருவருக்கு வாக்களித்து எமது எதிர்கால சந்ததியினரின் எதிர்காலத்தை தீர்மானிக்க போவது நாளை நாம் வாக்குச்சீட்டில் நாம் இடப்போகும் அந்த புள்ளடியே. 

அரசு மற்றும் பொதுமக்களின் பல்வேறு போராட்டத்திற்கும் அர்ப்பணிப்புக்கும் பின்னர் கொரோனா கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ள இந்நிலையில் பல பில்லியன் கணக்கில் செலவு செய்து தேர்தலை நடாத்தும் அரசின் செயலுக்கு நாம் கொடுக்கும் மரியாதை எமக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையை வீணடிப்பு செய்யாமல் வாக்களிக்க தகுதி பெற்ற அனைவரும் ஆளுமை மிக்க ஒரு வேட்பாளருக்கு சிறந்த முறையில் வாக்களிப்பது மட்டுமே.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |