தாந்தாமலையில் ஸ்ரீ முருகன் ஆலயமானது தமிழர் பண்பாடு கூறும் தொன்மை மிகு வரலாற்று சிறப்புமிக்கது, தொன்மை வாய்ந்தது, ஆடகசவுந்தரி அரசியாலும் முற்காலத்து முனிவர்கள் பலராலும் “தாண்டவகிரி” என அழைக்கப்பட்டது, தற்காலத்தில் சின்னக்கதிர்காமம் எனவும் அழைக்கப்படுகின்றது.
தாந்தாமலை முருகன் ஆலய தீர்த்தோற்சவம் இன்று(4) காலை பௌர்ணமி திதி, திருவோண நட்சத்திரம் கூடிய சுபமுகூர்த்த வேளையில் இடம்பெற்றது. இரவுத்திருவிழா மற்றும் தீர்த்தோற்சவம் ஆகியன முனைக்காடு கிராம மக்களால் நடத்தப்படுகின்றன.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட மக்கள் மாத்திரம் முகக்கவசங்களை அணிந்து, சமூக இடைவெளியினை பேணியவாறு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டமையை காணக்கூடியவாறு இருந்தது.
0 Comments