Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு

 

நாடாளுமன்றம் நாளை (21) காலை 9.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


9ஆவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது.

அமர்வின் ஆரம்பத்தில் புதிய சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதி தவிசாளர் ஆகியோர் வாக்கெடுப்பு இன்றி தெரிவு செய்யப்பட்டனர்.

தொடர்ந்து சபை நடவடிக்கை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்தினார்.

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையை தொடர்ந்து, நாளை (21) காலை 9.30 மணி வரையில் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments