Home » » எனக்கெதிரான அதிகமான சூழ்ச்சிகள் கட்சிக்குள்ளேயே இருந்தது- ஜனா

எனக்கெதிரான அதிகமான சூழ்ச்சிகள் கட்சிக்குள்ளேயே இருந்தது- ஜனா

 நான் எக்காரணம் கொண்டும் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக வரக்கூடாது

என்று கட்சிக்கு வெளியில் இருந்து எழுந்த எதிர்ப்பை விட, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளேயே எனக்கு கூடுதலான எதிர்ப்பு இருந்தது. மிகவும் போராட்டத்திற்கு மத்தியில், நானும் எனக்காக பாடுபட்ட அனைவரும் மிகவும் போராடித்தான் இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறோம். என இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக களமிறங்கி தேர்தலில் வெற்றி பெற்ற கருணாகரம் ஜனா தெரிவித்தார்.


இன்றைய தினம் காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 பாராளுமன்ற உறுப்பினர்களில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள், அதாவது கூடுதலான வாக்குகளை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்களித்து இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்திருக்கிறார்கள்.

எனக்கும் , தேசியத்திற்காகவும் வாக்களித்த அனைத்து மக்களுக்கும் மனப்பூர்வமான நன்றிகளை கூறிக் கொள்வதோடு, எனது வெற்றிக்காக பாடுபட்ட எனது தம்பிமார், நண்பர்கள், குடும்பத்தினர், ஊடகவியலாளர்கள், மற்றும் ஏனையவர்கள் எனது கட்சியை சேர்ந்தவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை கூறிக் கொள்வதோடு, இந்த வெற்றிக்காக அனைவரும் மிகவும் பாடுபட்டு கஷ்டப்பட்டு போராடி இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறோம். இந்த வெற்றியை பெற்று தந்திருக்கிறார்கள் இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறோம்.

அந்த வகையில் பல சூழ்ச்சிகள் எனக்கு எதிராக எனது வெற்றி வாய்ப்பை அழிப்பதற்காக பல சூழ்ச்சிகள் இந்த மாவட்டத்திலேயே செய்யப்பட்டது. அந்த சூழ்ச்சிகள், போராட்டம் என்பது கட்சிக்கு வெளியில் இருந்து வந்த எதிர்ப்புகளும் நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யக் கூடாது என்பதற்காக, எக்காரணம் கொண்டும் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக வரக்கூடாது என்று கட்சிக்கு வெளியில் இருந்து எழுந்த எதிர்ப்பை விட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளேயே எனக்கு கூடுதலான எதிர்ப்பு இருந்தது மிகவும் போராட்டத்திற்கு மத்தியில் நானும் எனக்காக பாடுபட்ட அனைவரும் மிகவும் போராடித்தான் இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறோம்.

தமிழ் மக்கள் குறிப்பாக மட்டக்களப்பு மக்கள் வித்தியாசமானதொரு பாதையை விரும்புகிறார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது இயங்கிக் கொண்டிருக்கிற பாதையிலே ஒரு மாற்றம் வேண்டும் . இது சம்பந்தமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பித்த காலம் இருந்து இன்றுவரை தொடர்ச்சியாக இருக்கும் ஒரே ஒரு கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ வடக்கு கிழக்கிலே கூட்டமைப்புக்கு கிடைக்கப்பெற்ற 10 பாராளுமன்ற உறுப்பினர்களில் தேசியப்பட்டியல் உட்பட பத்து உறுப்பினர்களில் 3 தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருக்கிறோம்.

வன்னியிலே இரண்டும், மட்டக்களப்பில் ஒன்று நாங்கள் மிக விரைவில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் எங்களது தலைமை குழு கூடி தொடர்ச்சியாக எங்களது அரசியல் பயணம் சம்பந்தமாகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் சம்பந்தமாகவும், மக்கள் தற்போது அபிவிருத்தியை கூடுதலாக விரும்புகிறார்கள். அந்த விடயம் சம்பந்தமாகவும், நாங்கள் கூடி ஆராய்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவை அவசரமாக பாராளுமன்றம் கூடுவதற்கு முன்பு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழுவை கூட்டி அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்க வேண்டும். தமிழ் மக்கள் கடந்த காலங்களில் எதிர்நோக்கியுள்ள இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வை வேண்டி நிற்கும் இந்த நேரத்திலே, வித்தியாசமான முறையிலேயே தமிழ் மக்கள் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.அந்த வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு சிறந்த தமிழ் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு முடிவை எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. கட்சிக்காக மக்கள் அல்ல மக்களுக்காக தான் கட்சி என்ற ரீதியிலே நாங்கள் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி செயல்பட வேண்டிய ஒரு தேவையும் இருக்கிறது.

அம்பாறை மாவட்டத்தில் 1994 ஆம் ஆண்டு இதே நிலைமை நடந்தது. அண்ணன் மாவை சேனாதிராஜா அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வந்து அங்கே போட்டியிட்ட அதன் காரணமாக வாக்குகள் இரண்டாக பிரிவடைந்து 94 ஆம் ஆண்டு தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் சென்றது அதே மாதிரியான நிலைமை இந்தமுறை ஏற்பட்டிருக்கிறது, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்றை யோசிக்கவேண்டும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு தேசியப்பட்டியல் உறுப்பினர் கிடைத்துள்ளது. அந்த தேசியப்பட்டியல் உறுப்பினரை அம்பாறை மாவட்டத்திற்கு கொடுப்பதற்கு நாங்கள் ஆலோசனை கொடுப்போம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழுவுக்கு.

அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் கடந்த காலங்களிலே போராட்ட காலங்களில் பலவகையிலும் பாதிக்கப்பட்டவர்கள். குறிப்பாக வடக்கு கிழக்கில் ஆயுதப்போராட்ட ரீதியாகவும், இன ரீதியாகவும், பல்வேறுபட்ட முறையிலே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் இருந்த பல தமிழ் கிராமங்கள் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. அந்த நிலைமை எதிர்காலத்தில் வரக்கூடாது என்பதை உணர்ந்து கொண்டு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூடுதலானஅக்கறையை அம்பாறை மாவட்டத்திலே செலுத்தவேண்டும் என தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |