Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தமிழ் மக்களின் குரலாக ஒலிப்பதற்கு த.தே.கூட்டமைப்பு தர்க்கம் செய்ய முடியாது - ஜீ.எல்.பீரிஸ்

 

புதிய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் குரலாக ஒலிப்பதற்கு தார்மீக மற்றும் நித்திய உரிமை உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தர்க்கம் செய்ய முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.


கொழும்பில் இன்று பிற்பகல் நடத்திய ஊடக சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். 

கடந்த முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களை பெற்றிருந்த நிலையில், இந்த முறை 10 ஆசனங்களை மாத்திரமே பெற்றுள்ளது.

தமிழ் மக்கள் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது மாத்திரம் நம்பிக்கை கொள்ளவில்லை.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி முதலான கட்சிகளுக்கும் தமிழ் மக்களின் நம்பிக்கை கிடைத்துள்ளதாக ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாப்பும் வகையிலேயே செயற்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை பாதுகாப்பதற்காக சட்டம் உள்ளிட்ட அரசியல் ஆலோசனைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வழங்கி வந்தது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்படவில்லை.

எனவே, அந்த பெரும்பான்மைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஆதரவு வழங்கியதாகவும் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தம் ஊடாக மாகாண சபைக்கு 36 அதிகார கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால், தமிழ்த தேசியக் கூட்டமைப்பு அவற்றை சரியாக பயன்படுத்தவில்லை என ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments