Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

திருகோணமலையில் வாக்கெண்ணும் மத்திய நிலையத்தில் பதற்றம்

திருகோணமலை விபுலானந்தா கல்லூரி வாக்கெண்ணும் மத்திய நிலையத்தில் இன்று பிற்பகல் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர் ஒருவரும் வாக்கு எண்ணும் நிலையத்துக்குள் செல்ல முற்பட்ட வேளை பொலிஸார் அவரை தடுத்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு வாக்குவாதம் ஏற்பட்டதுடன், குழப்பநிலை தோன்றியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வேட்பாளர் உரிய இடத்துக்கு வருகை தந்தபோது அவரிடம் பொருத்தமான அனுமதிப்பத்திரம் இன்மையால் அவரை உள்ளே நுழைய அனுமதிக்காது அவரை பொலிஸார் வாக்கு எண்ணும் நிலையத்தில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

திருகோணமலை மாவட்டத்தில் பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் பியந்த பத்திரனை என்பவரே இவ்வாறு வெளியேற்றபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments