Advertisement

Responsive Advertisement

பதவியேற்பு நிகழ்வில் பிள்ளையான் கலந்துகொள்ளாமைக்கான காரணம்



முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சநதிரகாந்தன் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்வதற்கு நீதித்துறையினரிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை இதன் காரணமாக அவர் இன்றைய பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிள்ளையானுக்கு நெருக்கமான வட்டாரங்கள் இதனை தெரிவித்துள்ளன.

ஜனாதிபதியை சந்தித்து ஆவணங்களை பெறுவதற்கு அனுமதி கிடைத்ததும் அவர் அமைச்சு பதவியை ஏற்பார் என பிள்ளையானுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிள்ளையான் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்வதற்கான அனுமதியை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம் ஆனால் அது வெற்றியளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments