பல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்ட எதிர்ப்பை மீறி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி மொஹமட் அலி சப்றியை நீதியமைச்சராக நியமிக்க, பிரதமர் எடுத்த தீர்மானம் சிறந்த தீர்மானம் என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர பாராட்டியுள்ளார்
அமைச்சரவையில் உள்ள ஏனைய உறுப்பினர்கள் குறித்து அக்கறை செலுத்தவில்லை எனவும் ராஜாங்க அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் கேலிக்குரியவை என மங்கள தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்த மங்கள சமரவீர தேர்தல் போட்டியில் இருந்து விலகிக்கொண்டதுடன் தனக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும் மக்களிடம் கோரிக்கை விடுத்தார். அத்துடன் நாடாளுமன்ற அரசியலில் இருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்திருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
0 Comments