Advertisement

Responsive Advertisement

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பான அறிவிப்பு

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலினை முன்னிட்டு இவ்வாறு அனைத்து பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக கல்வியமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது எதிர்வரும் 4, 5, 6 மற்றும் 7ஆம் திகதிகளில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 27ஆம் திகதி நாடளாவிய ரீதியிலுள்ள தரம் 11, 12 மற்றும் 13ஆம் தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டன.

எனினும் ஏனைய தரங்களுக்கான கல்வி நடவடிக்கை ஓகஸ்ட் 10 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும்போது சுகாதார வழிகாட்டுதல்களை அவசியமாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு கல்வி அமைச்சகம் அனைத்து அதிகாரிகளுக்கும் வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, இராஜாங்கனை மற்றும் வெலிகந்த கல்வி வலையங்களுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதிக்கு முன்னர் திறக்கப்படாது என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments