Advertisement

Responsive Advertisement

சிறுபான்மை கட்சிகளுடன் இணைந்து செயற்பட தயார்; ஆனால் தீவிரவாதிகளுடன் இணைந்து செயற்பட தயாரில்லை - பசில்

பொதுஜன பெரமுன சிறுபான்மை கட்சிகளுடன் இணைந்து செயற்படத்தயார் ஆனால் தீவிரவாதிகளுடன் இணைந்து செயற்படதயாரில்லை என கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசாங்கமும் பொதுஜன பெரமுனவும் அனைத்து சமூகங்களுடனும் இணைந்து செயற்பட தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சிறுபான்மை சமூகங்களை நோக்கி நேசக்கரத்தினை நீட்டுகின்றது, அந்த குழுக்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் என நம்பிக்கை கொண்டிருக்கின்றேன் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசாங்கமும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் அனைத்து மதங்களையும் இனங்களையும் சேர்ந்த சமூகங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகின்றன என தெரிவித்துள்ள பசில்ராஜபக்ச ஆனால் தீவிரவாத குழுக்கள் பயங்கரவாத குழுக்களுடன் இணைந்து செயற்படதயாரில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments