Home » » 43 வருடங்களின் பின்னர் இலங்கை பொதுத் தேர்தல் வரலாற்றில் ஏற்பட்ட மாற்றம்

43 வருடங்களின் பின்னர் இலங்கை பொதுத் தேர்தல் வரலாற்றில் ஏற்பட்ட மாற்றம்

நேற்று நடைபெற்ற தேர்தலில் முழுமையான வாக்குகள் 70 வீதமே பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்த பின்னர் நேற்று மாலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாக்குவீதம் 1977ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலின் பின்னர் மூன்றாவது மிககுறைந்த வாக்களிப்பு வீதத்தை பதிவு செய்த தேர்தலாக இது பார்க்கப்படுகின்றது. அற்கமைய

  • 1977ஆம் ஆண்டு 86.69 வீதமும்
  • 1989 ஆம் ஆண்டு 63.60 வீதமும்,
  • 1994 ஆம் ஆண்டு 76.24 வீதமும்,
  • 2001ஆம் ஆண்டு 76.03 வீதமும்,
  • 2004ஆம் ஆண்டு 75.95 வீதமும்,
  • 2010ஆம் ஆண்டு 61.26 வீதமும்,
  • 2015ஆம் ஆண்டு 77.66 வீதமும் பதிவாகியுள்ளது.

நேற்று நடந்த பொதுத் தேர்தலில் மாவட்ட ரீதியாக பதிவான வாக்கு வீதங்கள்,

  • கொழும்பு மாவட்டம் – 72%
  • கம்பஹா மாவட்டம் - 69%
  • களுத்துறை மாவட்டம் – 71%
  • கண்டி மாவட்டம் – 71%
  • நுவரெலியா மாவட்டம் – 75%
  • மாத்தளை மாவட்டம் – 71%
  • காலி மாவட்டம் – 69%
  • மாத்தறை மாவட்டம் – 71%
  • ஹம்பாந்தோட்டை மாவட்டம் – 73%
  • அநுராதபுரம் மாவட்டம் – 71%
  • பொலநறுவை மாவட்டம் – 71%
  • திருகோணமலை மாவட்டம் – 74%
  • மட்டக்களப்பு மாவட்டம் – 72%
  • திகாமடுல்ல மாவட்டம் – 72%
  • பதுளை மாவட்டம் – 74%
  • மொனராகலை மாவட்டம் – 74%
  • வன்னி மாவட்டம் – 73%
  • யாழ்ப்பாணம் மாவட்டம் – 69%
  • குருணாகல் மாவட்டம் – 69%
  • புத்தளம் மாவட்டம் – 63%
  • இரத்தினபுரி மாவட்டம் – 73%
  • கேகாலை மாவட்டம் – 71%

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |