Home » » அதிபர்கள் ஜூலை 28 - 31 வரை பாடசாலையில் தங்கியிருக்க வேண்டும்- கல்வி அமைச்சின் அறிவிப்பு on 7/25/2020

அதிபர்கள் ஜூலை 28 - 31 வரை பாடசாலையில் தங்கியிருக்க வேண்டும்- கல்வி அமைச்சின் அறிவிப்பு on 7/25/2020

பொதுத் தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் பாடசாலைகளின் சகல அதிபர்களும் எதிர்வரும் 28, 29, 30, 31ஆம் திகதிகளில் பாடசாலையில் தங்கியிருக்க வேண்டுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தேர்தலுக்காக பயன்படுத்தும் பாடசாலைகளை தயார்படுத்துவது தொடர்பில் விழிப்புணர்வுகளை வழங்குவதற்காகவே சகல பாடசாலை அதிபர் மற்றும் பிரதி அதிபர்கள் 28, 29, 30, 31ஆம் திகதிகள் பாடசாலையில் தங்கியிருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை 27 ஆம் திகதி தொடக்கம் 11, 12 மற்றும் 13 ஆம் தர மாணவர்களுக்காக பாடசாலைகளை ஆரம்பிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

கொவிட் 19 வைரஸ் பரவல் தொடர்பில் ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக பாடசாலைகளை திறக்கும் தினம் மற்றும் பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, பாடசாலைகள் காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 3.30 மணிக்கு நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏனைய மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கவுள்ளன.

மாணவர்கள் பாடசாலைக்கு வரும்போது சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கமைய பாடசாலை கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென பாடசாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு பாடசாலைகளை தயார்ப்படுத்துவது தொடர்பில் விழிப்புணர்வுகளை வழங்குவதற்கு சகல பாடசாலை அதிபர் மற்றும் பிரதி அதிபர்கள் 28 ,29, 30, 31 ஆம் திகதிகள் பாடசாலையில் தங்கியிருக்க வேண்டும்.என்பதுடன் இக் காலப் பகுதியில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு உதவி தேர்தல் ஆணையாளர்களுடன் கலந்துரையாடி தேர்தல் நடவடிக்கைக்காக பாடசாலைகளில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |