Home » » மாமாங்கப் பிள்ளையார் ஆலய நாளைய தேர்திருவிழாவில் 250 பக்தர்கள் மாத்திரம் தேரிழுக்க அனுமதி

மாமாங்கப் பிள்ளையார் ஆலய நாளைய தேர்திருவிழாவில் 250 பக்தர்கள் மாத்திரம் தேரிழுக்க அனுமதி

(மட்டக்களப்பு மொஹமட் தஸ்-ரீப்)
நாட்டின் சிலபகுதிகளில்அண்மைக்காலங்களில் கொவிட் 1 9 கொரோனா தொற்று பரவும் அபாயம் இனம்காணப்பட்டதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா நோய் பரவாமலிருப்பதனை நோக்காகக் கொண்டு புதிய நடவடிக்கைகள்பற்றி ஆராய இம்மாவட்டத்தின் கொரோனா தடுப்பு செயலணிக்கூட்டம் இன்று 18மாவட்ட செயலகத்தில் கூட்டப்பட்டது.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் இடம்பெற்றஇக்கூட்டத்தில்மீண்டும்சனநெரிசலாகக்காணப்படும்பொதுச்சந்தைகளையும்வாராந்த சந்தைகளையும் மீள வேறு இடங்களில் மாற்றவும் பொதுமக்கள் பொருட்களை கொள்வனவுசெய்ய வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முககவசம் அணிந்திருத்தல் வேண்டுமெனவும் அதேபோல் நீரிழிவு மற்றும் பிரஷர்நோயாளிகளுக்கு விரைவாக நோய் தொற்ற வாய்ப் பிருப்பதால் வைத்தியசாலை கிளினிக்கில் அழைக்கப்படாது மீண்டும் அவர்களுக்கான மருந்துவகைகளை வீடுகளுக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்வதென்றும் முடிவெடுக்கப்பட்டது .

இவைதவிர அமிர்தகழி மாமாங்கப்பிள்ளையார் ஆலய தேர்திருவிழாவில் 2 5 0 பக்தர்கள்மாத்திரம் தேரிழுக்கவும், பிதிர்கடமைநிறைவேற்ற தீர்த்தமாட நிருவாக சபையினருடன் 5 0 பக்தர்களை மாத்திரம்தீர்த்தக்கரையில் அணிமதிப்பதென்றும் ஏனையோருக்கு மாநகரசபையினரால் தீர்த்தநீர் எடுக்கப்பட்டு தீர்த்தமாட தெளிக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதே போல் தாந்தாமலை முருகன் ஆலய உற்சவம் ஆரம்பித்துள்ளதால் சனநெரிசலை கட்டுப்படுத்த இறுதிநாள்நிகழ்வுகளில் வெளிமாவட்ட பக்தர்களுக்கு பங்கேற்க அனுமதி மறுப்பதென்றும் இதற்க்குபக்தர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென்றும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆலயஉற்சவங்களின்போதுசனநெரிசலைசுகாதாரவிதிமுறைகளுக்கமைய கட்டுப்படுத்த பொலிசாரும் இராணுவத்தினரும் மாநகரசபையினருக்கு ஒத்துழைப்பு வழங்குவதென்றும் ,பிரத்தியேக கல்வி வகுப்புக்களை சுகாதார விதிமுறைகளுக்கமைய அனுமதிப்பதென்றும் இன்றைய கொரோனாதடுப்பு செயலணிகூட்டத்தில்தீர்மானிக்கப்பட்டதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாதெரிவித்தார்.

மேலும் அரசமற்றும் தனியார் பஸ்களில் பிரயாணிகள் சமூக இடைவெளி ,முகக்கவசம் கண்டிப்பாகபேணப்படவேண்டும் நெருக்கமாக பிரயாணிகளை ஏற்றிச்செல்ல அனுமதிப்பதில்லை என்றும் வீதிப்போக்கு வரத்து பொலிசார் திடீர் சோதனைநடாத்துவதென்றும்தீர்மானிக்கப்பட்டது

கொவிட் 1 9 கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இதுவரைகாலமும் எமது மாவட்டத்தை கட்டுப்பாட்டில்வைத்திருந்ததுபோல்எதிர்காலத்திலும்பாதுகாக்க பொதுமக்களும் பூரண ஒத்துழைப்பு நல்கமுன்வரவேண்டும் என மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் மட்டக்கப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லக்சிறி விஜேசேகர இராணுவத்தின் 231வது படையணி கட்டளை அதிகாரி,மற்றும்சுகாதாரதிணைக்களம்,மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் கொரோனா தடுப்பு செயலணியின்உறுப்பினர்கள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |