Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கதிர்காமத்திற்கு பொது மக்கள் வருவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக கதிர்காம புனித பூமிக்கு பொது மக்கள் வருவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  அதற்கமைய எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரை குறித்த நடைமுறை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

சுகாதார பாதுகாப்பினைக் கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மொனராகலை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஆடி வேல் விழாவில் பெரஹர நடைபெறும் காலப்பகுதியில் மக்களுக்கு அதனை பார்வையிடுவதற்கோ அல்லது அதில் கலந்துகொள்வதற்கோ சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாதெனவும் மொனராகலை மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார். 

கதிர்காமம் புனித திருத்தலத்தின் வருடாந்த ஆடி வேல் விழா எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments