Advertisement

Responsive Advertisement

பாடசாலைகள் திறப்பது தொடர்பில் சற்று முன்னர் வெளியான அறிவிப்பு

அனைத்து பாலர் பாடசாலைகள், முதலாம் மற்றும் இரண்டாம் தர மாணவர்களுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஒன்றாக அனைத்து பாடசாலைகளும் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் பாடசாலைகளை நான்கு கட்டங்களுக்கு அமைவாக மீண்டும் திறப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

Post a Comment

0 Comments