Advertisement

Responsive Advertisement

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது

பாறுக் ஷிஹான்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது என அம்பாறை மாவட்ட சம்மாந்துறை தொகுதி பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் சமாதான நீதிவான் அஸ்பர் உதுமாலெப்பை தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் திகாமடுல்ல  சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் முதன்மை வேட்பாளராக களமிறங்கிய இவர் விசேட செய்தியாளர் சந்திப்பை இன்று மேற்கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது.  கடந்த காலங்களில் முஸ்லிம் தலைமைகளின் கதைகளை கேட்டு  செயலற்று போயுள்ளமையை உணர்ந்து செயற்பட வேண்டும்.கடந்த கால முஸ்லீம் தலைமைகளின் கதைகளை கேட்டு செயற்பட்ட எமது மக்கள் சனாதிபதி தேர்தலின் பின்னர் அவர்களின் இனவாத போக்கை உணர்ந்து ஆட்சியில் பங்காளார்களாக செயற்பட தயாராகி விட்டனர்.

கடந்த சனாதிபதி தேர்தலில் எமது சனாதிபதியை சிறுபான்மை கட்சி தலைவர்கள் கொலைகாரன் இனவாதி இவர் ஆட்சிக்கு வந்தால் நாடு சுடுகாடாக மாறி மியன்மார் போல மாறிவிடும் என மேடைகளில் இனவாதம் பேசி அன்னம் சின்னத்திற்கு வாக்களிக்க வைத்தார்கள்.  கொரோனா அனர்த்த காலத்தில் வல்லரசு நாடுகள் தடுமாறிய போது எமது சனாதிபதி அனர்த்தத்தில் இருந்து மீட்டு நாட்டு மக்களுக்கு மாதம் 5 ஆயிரம் வழங்கி வைத்ததோடு விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்கவும் நடவடிக்கைகளை எடுத்திருந்தார். இனிவரும் காலங்களிலும் சிறுபான்மை தலைவர்களின் பம்மாத்து வார்த்தைகளை நம்ப மக்கள் தயார் இல்லை எனவே தான் எமது  ஊரிற்கான வளமான சுபிட்சம் நிறைந்த எதிர்காலத்தை அரசுடன் இணைந்து முன்னெடுக்க ஒன்றிணைவோம் என குறிப்பிட்டார்.

மேலும் எதிர்காலத்திலாவது சந்தர்ப்பங்கள் சரியாக பயன்படுத்தப்படுமாயின் சந்தித்த இன்னல்கள்  அனைத்தும் தொடர்ந்து வரும் சில வருடங்களினுள் தீர்த்து வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.கடந்த காலங்களில் மக்களை தவறாக வழிநடத்திய தரப்புக்கள்  பல்வேறு கோஷங்களை முன்வைத்த போதிலும் அவற்றை அடைவதற்கான வேலைத் திட்டம் அவர்களிடம் இருக்கவில்லை எமது அரசாங்கத்தின் வேலைத் திட்டங்கள் தொடர்பான அனைத்து விடயங்களையும் மக்கள் மத்தியில் கொண்டு சென்று அவர்களுக்கு சரியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் .அதனை நான் தற்போது மேற்கொண்டுள்ளேன்.

மேலும்இ யதார்தத்தினை  புரிந்து கொண்டு மக்கள்  கட்சியின் கரங்களை பலப்படுத்துவார்களாயின் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் அனைத்தையும்  தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments