Advertisement

Responsive Advertisement

உயர்தரப் பரீட்சையை நடத்தும் திகதிகளை நிர்ணயிப்பதற்கு விசேட குழு


கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்தும் திகதிகளை நிர்ணயிப்பதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் தலைவராக கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை நடாத்துவது குறித்து முன்வைக்கப்பட்டுள்ள அனைத்துவிதமான பரிந்துரைகளும் பரிசீலனை செய்யப்பட உள்ளன.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் அனைத்து பரிந்துரைகளையும் அதிபர்கள் ஊடாக பெற்றுக் கொள்ளுமாறு பிராந்திய பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டள்ளது.
இந்த விசேட குழு எந்த திகதியில் பரீட்சை நடத்துவது என்பது குறித்து தீர்மானிக்க உள்ளது.
முன்னதாக செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 2ம் திகதி வரையில் உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் உயர் பரீட்சையை சில வாரங்களுக்கு தாமதப்படுத்துமாறு மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினரால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்தே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments