இலங்கையில் மீண்டும் கொரோனா பரவல் ஏற்படுமாயின் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து பொது போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், இன்று பொது போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.
இதனையடுத்து நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் கொழும்புக்கு மக்கள் வந்து செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர், “இலங்கையில் சமூகத்திற்குள் கொரோனா வைரஸ் தொற்று பரவுவது முற்றாக இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.
எனினும், பொது போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டுமொரு முறை கொரோனா தொற்று ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுகின்றது.
அதிக அச்சுறுத்தலான மாவட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்ட கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்துக்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் ஏற்படுமாயின், அதற்கு பொது போக்குவரத்து சேவைகளே மிகவும் ஆபத்தான இடமாக காணப்படும்.
இந்நிலையில், இலங்கையில் மீண்டும் கொரோனா பரவல் ஏற்படுமாயின் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments: