Home » » சுமந்திரன் சொன்னது உண்மையே; அம்மானை கிழக்கிற்கு மட்டுமல்ல இந்த உலகிற்கே யாரென தெரியும் - கருணா அம்மான்

சுமந்திரன் சொன்னது உண்மையே; அம்மானை கிழக்கிற்கு மட்டுமல்ல இந்த உலகிற்கே யாரென தெரியும் - கருணா அம்மான்

(வி.சுகிர்தகுமார்)
கிழக்கில் உள்ள மக்களுக்கு கருணா அம்மானை தெரியும் என்கிறார்; சுமந்திரன். அவர் சொன்னது உண்மையே. கருணா அம்மானை கிழக்கிற்கு மட்டுமல்ல இந்த உலகிற்கே யாரென தெரியும் என தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா அம்மான் தெரிவித்தார்.

அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தை நேற்று(16) மாலை திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அகில இலங்கை தமிழர் மகாசபையின் சின்னத்தில் போட்டியிடும் தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணியின் வேட்பாளர் ஆர்.சுவர்ணராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு வருகை தந்த கருணா அம்மானை கட்சி ஆதரவாளர்கள்; மாலையிட்டு வரவேற்றனர்.

பின்னர் கட்சியின் தேர்தல் அலுவலகத்தை சம்;பிரதாய பூர்வமாக திறந்து வைத்த அவர் சம்பவ குறிப்பேட்டில் கையொப்பமிட்டார்.

இதன் பின்னர் மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர் ....சுமந்திரனை பொறுத்தவரை அரசியலில் முதிர்ச்சியடையாதவர். ஜக்கிய தேசிய கட்சியினரால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினுள் அனுப்பிவைக்கப்பட்ட ஒரு புல்லுருவி. அவர் எப்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பினுள் உள்வாங்கப்பட்டாரோ அன்றிலிருந்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சின்னாபின்னமாக்கப்பட்டது.

அவர் கிழக்கு மக்களை மட்டுமல்ல வடகிழக்கு மக்களை பற்றி பேச அருகதையற்றவர். போராட்ட காலத்தில் கொழும்பில் பிறந்து கொழும்பிலே வளர்ந்தவர். வடகிழக்கில் உள்ள மக்களின் மனநிலையை அறியாதவர். அவ்வாறானவர்களின் கருத்தை நாம் பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை என்றார்.

இந்த நிலையிலே அம்பாரை மாவட்டத்தில் புரட்சியோடு எமது செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிழக்கில் தமிழர் ஒருவரை முதலமைச்சராக்குவதே இதன் முடிவாகும். அதனை நோக்கியதாகவே எமது நகர்வு முன்னெடுக்கப்படுகின்றது என்றார்.

இதேநேரம் கடந்த மாகாண சபையில் 11 ஆசனங்களை வைத்துக்கொண்டு 7 ஆசனங்களுடன் இருந்த முஸ்லிம் காங்கிரசுக்கு முதலமைச்சரை தாரை வார்த்த சம்மந்தன் ஜயா தேசியம் பற்றி எங்களுடன் பேசுகின்றார்.

அம்பாரை மாவட்டத்தை பொறுத்தவரையில் மிகவும் சிக்கல் நிறைந்த மாவட்டமாக கருதப்படுகின்றது. அதிலும் தம்pழர்களே பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். 22 தமிழ் கிராமங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அரச உயர் பதவிகளில் தமிழர்கள் இல்லை. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விதவைகளாக உள்ளனர். இதற்கெல்லாம் தீர்வு காணப்படும் என கூறிய அவர் அம்பாரையில் தமிழ் மக்கள் எழுச்சி பெற்றுள்ளனர். இதன்படி எனவும் சுட்டிக்காட்டினார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |