Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு கொழும்பு புகையிரத சேவை நாளை ஆரம்பம்

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு பகுதிக்கு நாளை (08) காலை 6.10 மணிக்கு புகையிரத சேவை இடம்பெறவுள்ளதாக மட்டக்களப்பு புகையிரத நிலைய அதிபர் ஏ.யூ.என்.நுவைஸ் தெரிவித்தார்.<கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த வரையறை தளர்த்தப்பட்டுள்ளதால் திங்கட்கிழமை முதல் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கொழும்பு நோக்கி பயணிக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

இதேவேளை சில ரயில்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து ரயில்களும் நேர அட்டவணைக்கு அமைவாக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று ரயில்வே திணைக்களத்தின் மேலதிக பொது முகாமையாளர் வி.ஏ.சி பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments