Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இம்மாதம் நிகழவிருக்கும் இரு கிரகணங்கள்

இந்தாண்டு முதல் கிரகணமாக சந்திர கிரகணம் கடந்த ஜனவரி 10 ஆம் திகதி நள்ளிரவு தொடங்கி 11 ஆம் திகதி வரை நீடித்தது.

இந்நிலையில் தெளிவற்ற சந்திர கிரகணம் (penumbral lunar eclipses) ஜூன் 5 முதல் 6 வரை நள்ளிரவில் நடக்க உள்ளது. ஜூன் 21 ம் திகதி ஆண்டின் முதல் சூரிய கிரகணம் (Solar eclipse) நிகழ உள்ளது.

பூமி சூரியனையும், சந்திரன் பூமியையும் சுற்றி வருகின்றது. இந்நிலையில் சூரியன் - சந்திரன் இடையே ஒரே நேர் கோட்டில் பூமி வரும் போது, சூரியனின் ஒளி சந்திரனின் படாமல் மறைக்கப்படுகிறது. இந்த நிகழ்வு சந்திர கிரகணம் எனபப்டும்.

சந்திர கிரகணம் ஏற்படும் நேரம் :

ஜூன் 5 ஆம் திகதி, சந்திர கிரகணம் இரவு 11:15 மணிக்கு தொடங்கி ஜூன் 6 ஆம் தேதி 2:34 மணி வரை நீடித்து முடிகிறது. இந்த கிரகணத்திற்கு ஸ்ட்ராபெரி மூன் கிரகணம் (Strawberry Moon Eclipse) என்று அழைக்கப்படுகிறது.

பகுதி சந்திர கிரகணமாக நிகழ்வும் இந்த நிக்ழவின் போது 57% நிலவு மறைக்கப்படும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவிக்கின்றது.

இந்த கிரகணம் மொத்தமாக மூன்று மணி நேரமும் பதினெட்டு நிமிடங்கள் வரை நீடிக்கப் போகிறது.

எங்கெல்லாம் சந்திர கிரகணம் தெரியும்?

இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள், ஐரோப்பா, அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா, பசுபிக் பிராந்தியம், தென் அமெரிக்காவின் தென் கிழக்கு பகுதிகள், அத்திலாந்திக், இந்திய பெருங்கடல், அந்தாட்டிக்கா ஆகிய இடங்களில் இந்த சந்திர கிரகணம் பார்க்க முடியும்.

இந்த சந்திர கிரகணம் மக்கள் கண்டு ரசிப்பது சற்று கடினம் தான். ஏனெனில் மங்கலான சந்திர கிரகணமாக இருக்கும் என்பதால் சரியாக தெரியாது.

Post a Comment

0 Comments