விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கிய மறைந்த முன்னாள் ஜனாதிபதியின் மகனே தற்போது கருணா தொடர்பான விமர்சனங்களை முன்வைத்து வருவதாக பிரதர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கருணா தொடர்பான விமர்சனங்கள் அரசியல் நோக்கங்களுக்காக தற்போது பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பாக சமகி ஜன பாலவேகயா (எஸ்.ஜே.பி) தலைவர் சஜித் பிரேமதாசாவினால் முன்வைக்கப்பட்டு வருகின்றது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

சஜித்தின் தந்தை தான் “விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கினார்” என்று இவர் மீது பிரதமர் குற்றம் சாட்டினார்.

முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச “சிங்கள மக்களைக் கொல்வதற்கும்” “இராணுவத்தை நோக்கிச் சுடுவதற்கும்” ஆயுதங்கள் வழங்கப்பட்டதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

சுடுவதற்கு ஆயுதங்களை கொடுத்த நபர்களின் குழந்தைகள் தான் இப்போது கருணாவைப் பற்றி கூச்சலிடுகிறார்கள் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அல்லது விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதியாக இருந்த கருணா அரசியல்வாதியாக மாறியவர் இவருடைய கருத்துக்கள் தவறாகப் புகாரளிக்கப்பட்டதாகவும் பிரதமர் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் கருணா என்பவர் யார் என்பதற்கும் அவருடைய பலம் என்ன என்பதற்கும் அவருடைய வாயால் தெரிவிக்க வேண்டியதன் அவசியமில்லை எனவும், அவருடைய போர் செய்திகள் உலகறிந்த விடயம் எனவும் பிரதமர் குளியாபிட்டியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.