Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஜூன் மாதம் 29 ஆம் திகதியுடன் பாடசாலை விடுமுறை நிறைவு

ஜூன் மாதம் 29 ஆம் திகதியுடன் பாடசாலை விடுமுறை நிறைவடைவதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
நான்கு கட்டங்களாக பாடசாலைகள் திறக்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.
இதற்கமைய, முதற்கட்டமாக ஜூலை 6 ஆம் திகதி 5, 11, 13 ஆம் ஆண்டு மாணவர்களுக்காக பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.
இதேவேளை, உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது. செப்டம்பர் 7 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 2 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் உயர்தரப் பரீட்சையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் செப்டம்பர் 13 ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கல்வி அ​மைச்சர் குறிப்பிட்டார்.
இன்று பிற்பகல் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும இது தொடர்பில் தௌிவுபடுத்தினார்.

Post a Comment

0 Comments