Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன , கிழக்கு மாகாண ஆளுeர் அனுராதா ஜஹம்பத் ஆகியோர் அடங்கிய குழுவினர் பொத்துவில் பிரதேசத்துக்கு விஜயம்

( எம்.ஐ.எம்.அஸ்ஹர்  )

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன , கிழக்கு மாகாண ஆளுணர் அனுராதா ஜஹம்பத்   ஆகியோர்  அடங்கிய குழுவினர் கடந்த 14ஆம் திகதி பொத்துவில் பிரதேசத்துக்கு விஜயம் செய்து பொத்துவில் முஹுது மகா விகாரையை அண்டி உள்ள காணிகளை தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமாக்க  நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது
இதை அறிந்த பொத்துவில் பிரதேச மக்கள் சந்தேகமும் பதட்டமடைந்துள்ள இந்த நிலமையில்  நிலைமைகளை கேட்டறிந்து  நடவடிக்கை எடுக்கும் நோக்கில் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்   பொத்துவில் பிரதேசத்திற்கு  கடந்த ஞாயிற்றுக் கிழமை  நேரடியாகச் சென்று கள நிலவரங்களை அறிந்து கொண்டார் .
பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்எஸ் அப்துல் பாசித் தலைமையிலான பிரதேச சபை உறுப்பினர்கள் ,முக்கியஸ்தர்களை எச்.எம்.எம்.ஹரீஸ்  சந்தித்து  சம்பந்தப்பட்ட  விடயங்களை ஆராய்ந்து  பொத்துவில் பிரதேச  மக்களுக்கு பாதிப்புகள் இல்லாமல் தீர்த்து வைப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் , அரசின் உயர் மட்ட பிரதிநிதிகள் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்து தீர்வை பெற்றுக் கொடுப்பது என தீர்மானம் எடுக்கப்பட்டது .  மேலும் அண்மையில் பொத்துவில் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்  ( கருணா அம்மான்) ” சத்திப்பொல ”  வாராந்த சந்தையை பொத்துவிலுக்கு  கொண்டு வந்து ஒற்றுமையாக வாழும் முஸ்லிம்  - தமிழ் மக்களிடையே இன முரண்பாட்டை ஏற்படுத்த எடுத்த முயற்சிகள் தொடர்பிலும்  இக் கள விஜயத்தின் போது கேட்டறிந்ததுடன் ,    விநாயகமூர்த்தி முரளிதரனின் இனவாதப் போக்கை கண்டித்ததுடன் , இவ்விடயம்  தொடர்பாக மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பொத்துவில் கிளைத்தலைவர்  மௌலவி  ஆதம்லெவ்வை  அவர்களை சந்தித்து  வாராந்த சந்தை  மற்றும் தொல்பொருள் காணிப் பிரச்சினைகள் தொடர்பாக நீண்ட நேரம் கலந்துரையாடலில்  ஈடுபட்டு ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டார்.
 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்  பொத்துவில்  தொகுதி அமைப்பாளரும் , பொத்துவில் பிரதேச சபை உறுப்பினருமான  எம்.ஏ.  மஜீத் அவர்களை எச்.எம்.எம்.ஹரீஸ் சந்தித்து காணி விவகாரம் தொடர்பில் கலந்துரையாடினார்.

Post a Comment

0 Comments