Home » » யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்! வைத்தியர் த.சத்தியமூர்த்தி வெளியட்டுள்ள தகவல்

யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்! வைத்தியர் த.சத்தியமூர்த்தி வெளியட்டுள்ள தகவல்

யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த பெண் ஒருவர் தொடர்பில் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி விளக்கமளித்துள்ளார்.
இன்று இடம்பெற்றிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
குறித்த வயோதிப பெண் கொழும்பிலிருந்து அழைத்துவரப்பட்டு, கொடிகாமம் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாகவும், அங்கிருந்து மூன்று தினங்களுக்கு முன்னதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
அவருக்கு ஷயரோகம், உயர் குருதி அழுத்தம், சிறுநீரக செயலிழப்பு போன்ற சுகயீனங்கள் காணப்பட்டதாக வைத்தியர் த.சத்தியமூர்த்தி தௌிவுபடுத்தினார்.
இந்நிலையில், சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும், சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நேற்றைய தினம் வைத்தியசாலையில் 49 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், எவருக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதாக த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |