Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் வெப்பச்சுட்டி அதிதீவிர எச்சரிக்கை நிலையை அடையும்


இலங்கையில் வெப்பச்சுட்டி அதிதீவிர எச்சரிக்கை நிலையை அடையும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
32 செல்சியஸ் முதல் 41 செல்சியஸ் வரையான வெப்பம் கிழக்கின் சில பிரதேசங்களிலும் வடமத்திய மாகாணத்திலும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் நிலவும் என்று வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
இன்று பிற்பகல் முதல் நாளை வரை இந்த வெப்பநிலை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெப்பம் சூழ்நிலையில் தொடர்ந்தும் ஒருவர் பணியாற்றும்போது வெப்ப அழுத்தம் உட்பட்ட உடற் பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
வெப்ப குறியீட்டு முன்னறிவிப்பு ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலையை பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது.
இது மனித உடலில் உணரப்படும் நிலையாகவும் உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.
இது அதிகபட்ச வெப்பநிலையின் முன்னறிவிப்பு அல்ல. எனினும் உலகளாவிய வானிலை முன்கணிப்பு மாதிரி தரவுகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments