Home » » மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடர்பில் விசேட தகவல் வெளியானது!

மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடர்பில் விசேட தகவல் வெளியானது!

நாடு முழுவதும் விற்பனை அல்லது உற்பத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கும் வணிக நிறுவனங்களுக்கு விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன்படி, குறித்த நிறுவனங்களின் வாகனங்களுக்கு மாவட்டங்களுக்கு இடையிலான ஊரடங்கு அனுமதிகளை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவ்வாறான வாகனங்களுக்கு விசேட ஸட்டிக்கர் மற்றும் வாகன இலக்கம், வாகனத்தை செலுத்தும் சாரதி மற்றும் நடத்துனர் தொடர்பான விபரங்கள் பொலிஸ் தலைமையகத்திற்கு அனுப்படவேண்டுமென கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, மாவட்டங்களுக்கு இடையே பயணிக்கும் நிறுவனங்களின் வாகனங்களை செலுத்தும் சாரதி மற்றும் நடத்துனர்கள் சுகாதார பரிசோதகர்களினால் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ்களை பெறவேண்டுமெனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பொருட்கள் உற்பத்தி மற்றும் விநியோகம், மின் உபகரணங்கள் விநியோகம், பல்பொருள் அங்காடிகளுக்கு பொருற்களை கொண்டுசெல்லல் , பதப்படுத்தப்பட்ட உணவு விநியோக வலையமைப்புகள் போன்ற நடவடிக்கைகளுக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்வுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |