Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஜூலை இரண்டாம் வாரத்தில் பொதுத் தேர்தல் நடைபெற வாய்ப்பு


எதிர்வரும் பொதுத் தேர்தல் ஜூலை மாதம் இரண்டாம் வாரத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னர் தேர்தல் ஆணைக்குழு மீண்டும் சுகாதார பரிந்துரைகளை பெற்றுக்கொள்ள உள்ளது.
எவ்வாறாயினும் ஏற்கனவே அறிவித்துள்ளது போல் எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி தேர்தல் நடைபெறாது எனக் கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்தை கலைத்து வெளியிட்டப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறும் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறும் கோரி, ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலைமையில் தேர்தலை நடத்த வாய்ப்புள்ளதா என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரிடம் எழுப்பட்டுள்ள கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், தேர்தலை இடைநிறுத்துமாறு உயர் நீதிமன்றம் தடையுத்தரவை பிறப்பிக்கவில்லை என்றால், தேர்தலை நடத்துவதற்காக பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments