பிரிட்டனில் தனது இரண்டு பிள்ளைகளையும் யாழ்ப்பாணதமிழரான தந்தை கழுத்தை அறுத்தே கொன்றுள்ளதாக விசாரணைகளில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பில் நீதிமன்ற விசாரணை தொடங்கியுள்ள நிலையில், மூன்று வயதான சிறுவன் நிகாஷ் தந்தையால் கழுத்தறுபட்டு மரணமடைந்துள்ளதாக அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் 19 மாதமேயான குழந்தை பவின்யாவும் கழுத்தில் ஏற்பட்ட ஆழமான காயம் காரணமாகவே இறந்துள்ளது மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
குடும்ப பிரச்சனை காரணமாக தனது இரு பிள்ளைகளை கொன்ற நிதின்குமார் என்ற யாழ்ப்பாணதமிழர் தானும் தற்கொலைக்கு முயன்ற நிலையில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments: