Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கொரோனாவால் அதிர்கிறது அமெரிக்கா - உயிரிழப்பு 76 ஆயிரத்தை தாண்டியது

அமெரிக்காவில் கொரோனா வைரஸிற்கு பலியானோர் எண்ணிக்கை 76 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
அமெரிக்காவில் 12 இலட்சத்து 89 ஆயிரத்து 51 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 9 லட்சத்து 96 ஆயிரத்து 669 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 2 இலட்சத்து 15 ஆயிரத்து 591 பேர் குணமடைந்துள்ளனர்.
அந்நாட்டில் புதிதாக மேலும் 1992 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 76 ஆயிரத்து 791 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 76 ஆயிரத்தை கடந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் மிகுந்த கலக்கத்தில் உறைந்து போயுள்ளனர்.

Post a Comment

0 Comments