Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

முடக்கப்பட்ட ஸ்ரீலங்காவை வழமைக்கு திருப்புவது குறித்து விசேட வர்த்தமானி

நாட்டில் நிலவி வரும் ஊரடங்குச் சட்டம் காரணமாக முடக்கப்பட்ட பொது மக்களின் வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கான வேலைத்திட்டம் குறித்த விசேட வர்த்தமானியை வெளியிடுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 11 ஆம் திகதி ஊரடங்குச் சட்டம் நீக்கப்படுவது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்,
மேல் மாகாணத்தின் பங்களிப்பின்றி எமது நாட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது அதனால் மேல் மாகாணம் திறக்கப்பட வேண்டும். அங்கு தற்போதைய ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டாலும் மேல் மாகாணத்தில் முக்கிய பணிகளை ஆரம்பிக்க வேண்டும்.
உரிய சட்ட கட்டமைப்புக்குள் தனியார் நிறுவனங்கள் காலை 10.00 மணிக்கு திறக்கப்பட்டு அங்கு பணியாற்ற வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கை குறித்து நிறுவன தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும்.
மாவட்டங்களுக்கு இடையிலான பொதுப்போக்குவரத்து தொடர்பான புதிய சட்டதிட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராகவும், சட்டங்களுக்கு அமைய செயற்படும் அரச அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் நபர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக விசேட பேச்சு வார்த்தைகளை எதிர்வரும் தினங்களில் நடத்தப்படவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments