Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மஹிந்தவுக்கும் டக்ளஸ்க்குமிடையிலான சந்திப்பு

மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சந்தித்து வடக்கு மக்கள் மற்றும் மீனவர்களின் விடயம் பற்றி பேச்சு நடத்தியுள்ளார்.


கொழும்பு விஜேராமய வீதியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை பற்றி பிரதமரின் கவனத்திற்கு அமைச்சர் இதன்போது கொண்டுவந்தார்.

அதேவேளை, வடக்கில் உள்ள மீனவர்களின் பிரச்சினை குறித்தும் அமைச்சர் இதன்போது பேசியுள்ளார்.

மீனவர்களின் மீன்பிடி துறைகளை மீனவத் துறைமுகமாக தரம் உயர்த்துதல், மீனவர்களின் இலகு கொடுக்கல் வாங்களுக்காக மீனவர் வங்கி ஒன்றை அறிமுகம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளும் பிரதமரிடம் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் தென்னிலக்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் நெருக்கடியை எதிர்கொண்ட வடக்கு தொழிலாளர்களை சொந்த பகுதிகளுக்கு அழைத்துச்செல்ல உதவும் விடயம் பற்றியும் பிரதரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

Post a Comment

0 Comments